கலை இலக்கியங்கள் குறித்தத சமூக ஆய்வுகள் நடைபெறுவதும் அவை மக்களிடையே பரவலாக அறியப்படுத்தப்படுவதும் இந்தியச்சூழலில் மிக மந்தகதியிலேயே இருக்கின்றது.

மக்கள் வரிப்பணத்தில் இருந்து கிடைக்கின்ற நிதிகளில் நடைபெறுகின்ற ஆய்வுகள் வெளிப்படுத்தப்படுகின்றபோது அதாவது ஆய்வு முடிவுகளை சமூகத்திற்கு அறிவிக்கும்போது அவை தனியார்களின் கைவசமாகிவிடுகின்றன.

அதைத் கண்டடைவதற்கு மிகவும் கடினப்படவேண்டியிருக்கின்றது. அதிகபொருள்செலவும் ஏற்படுகின்றது.

இத்தகையச் சூழலில் அனலி ஆய்வு நடுவத்தின் வழியாக குடிமக்களுக்கான ஆய்வு நடவடிக்கைகளை முன்னெடுக்கின்றது. அவ்வாறாயின் ஆய்வும் ஆய்வறிஞர்களும் மக்களும் அன்னியப்பட்டு நிற்காமல். ஆய்வின் பயனை அனைவரும் பெரும்பொருட்டு இயங்குதலாகும்.

குடிமக்கள் ஆய்வு (Citizen Research)

 

 

ஆய்வென்பது மக்கள் பயனுறவே. ஆய்வு நடவடிக்கைகளையும் முடிவு அறிக்கைகளை மக்களுக்கான பொதுவெளிக்கு கொணர்வோம். குடிமக்கள் எளிதாக ஆய்வு செய்யவும், முன்னாய்வு அறிக்கைகளை கண்டடையவும் இயக்கம் கட்டுவோம். மக்கள் வரிப்பணத்தில் நடைபெறும் ஆய்வுகள் மக்களுக்கு வெளிப்படுத்தப்பட வேண்டும் எனும் ஆய்வுவறிக்கை அறியும் உரிமைக்கான குரலிடுவோம்.

இரா. அரிகரசுதன்

 

 

 

 

ஆய்வுகள் மக்களுக்காக

 

 

ஆய்வுகள் எளிய மக்கள் நடாத்துதலுக்கான வாய்ப்புகளை உண்டாக்குதல்.

 

 

ஆய்வுமுடிவுகளை இரகசியப்படுத்தாமலும் நுகர்வு பண்டமாக மாற்றாமலும் பொதுமைப்படுத்துவது.

 

 

Visited 28 times, 1 visit(s) today
Close
Translate »