கொத்துகிறவள்தான்
அவள்
இன்றையக் கொத்துதல்
மூளைக்கு
நெருக்கமாக சென்றுவிட்டது
 
பதறிப் துடித்த அவளைக் குறித்த
எண்ணங்கள் கீழ் மூளைக்குள்
பதுங்கிக் கொண்டன
 
நேற்று
என் கண்களைக் கொத்தினாள்
அவள் பிம்பம் சிதைவுற்றது
 
எத்தனையோ
பாகங்களை
இதுவரைக் கொத்தி இருக்கிறாள்
 
நான் ஓடி
ஒளியவில்லை
எல்லாக்
கொத்துதலையும்
வாங்கிக் கொள்வேன்
சிறு புன்னகையோடு
 
நாளாக……
கொத்துதல் ஆழமாகலாம்
இதயத்தின் ஆழம் வரை
………………..

— பைசல், 20.02.2024
கவிஞர் பைசல் தக்கலை, கன்னியாகுமரி மாவட்டம், தமிழ்நாடு
Visited 64 times, 1 visit(s) today
Close
Translate »