Written by 5:40 am கவிதை

பட்டாம் பூச்சியை உண்ணும் கோழிகள்

நிலம் தாள
வலசை பறக்கும் பட்டாம்பூச்சிகளை
விரட்டிக் கொத்துகிறது
கோழி
 
இரையை எட்டிப்பிடிக்கும்
வேகத்தில் ஓடும்
அதன்
கால்களுக்கிடையே
சிக்கியிருக்கிறது
சின்ன தூவல்
கேள்வி ஒன்றை சுமந்தபடி
 
மாலையில் பறப்பவை அல்லவே
பட்டாம்பூச்சிகள்?
 
உண்மை.
 
அப்படியே தெரிந்திருக்கின்றது
இந்த சின்ன தூவலுக்கு!
 
கண் கொண்டு
காண வேண்டும்!
பட்டாம்பூச்சியையும்
தூவலையும்
 
அவ்வளவு அழகு!
 
ஆழ குழிதோண்டி
அண்ணாந்து பார்க்க
தெரியுமழகு அது!
 
அங்ஙனமே பார்த்துக்
கொண்டிருக்கின்றேன்
ஆர! அமர!
 
…………..
இரா. அரிகரசுதன் (21.06.2022)
Visited 7 times, 1 visit(s) today
Close
Translate »