Written by 5:44 am கவிதை

சின்ன புவியதிர்ச்சி

லேசான அதிர்வுதான்
பயப்படத்தேவையில்லை
 
வலைகளென வளைந்து
செல்லும் பாலங்கள்
தண்டவாளங்கள்
வேதியாலைகள்
அணுஉலைகள்
அணுகுண்டுகள்
அனைத்தும் அனைத்தும்
பத்திரமாகவே இருக்கின்றன
இயங்குகின்றன
 
நடுக்கம்
மீண்டும் வருமா?
அதன் அளவு
கூடிக்கொண்டிருக்குமா?
 
பயப்படத்தேவையில்லை
ஆயத்தமாகவே இருக்கின்றோம்
 
என்ன ஆயத்தம்?
 
பேரிடர் மீட்புகுழு வைத்திருக்கிறோம்
 
வைத்திருந்து?
 
நீங்கள் பார்த்திருக்கின்றீர்கள் அல்லவா
சுனாமி
விசவாயு
பெருவெள்ளம்
புவியதிர்ச்சி
எரிமலை
அணுகுண்டு
அணுஉலை
சூறாவளி
எல்லாவற்றிலேயும் எங்களுக்கு
அனுபவம் இருக்கின்றது
 
எவ்வாறு?
 
பயப்படத்தேவையில்லை
அனுபவம் இருக்கின்றது
ஆயத்தமாகவே இருக்கின்றோம்
 
அப்படியா!
 
ஆமாம்! ஆமாம்!!
 
2.3 அளவேயான சின்ன புவியதிர்ச்சி
நாங்கள் லேசான நடுக்கத்தை உணர்ந்தோம்.
 
————
இரா. அரிகரசுதன் (23.05.2022)
Visited 4 times, 1 visit(s) today
Close
Translate »