Written by 9:49 am கவிதை • One Comment

கதைசொல்லி

கண்கள் நிலைகுத்த
கன்னத்தில் கைபதித்து
உற்சாகத்தோடு
‘ஊங்’ கொட்டிய
கடைசிச் சீவனும்
காலாவதி ஆகிவிட
கதைகள் அனைத்தையும்
கைப்பற்றி அழைத்துப் போய் ஆழ்கிணற்றில் வீழ்ந்தான் ஆஜானுபாகுவான
கதைசொல்லி
சனம் பதறி குத்தத்திற்காய்
பரிகாரம் தேட
அன்று தொட்டு
எட்டாம் நாள்
கதைகளும்
கதைசொல்லியும்
உயிர்த்தெழ
பரிவாரங்களாயின
கதைகள்-
காவல் தெய்வமானான் கதைசொல்லி
பிறகென்ன ‘ஊங்’ கொட்ட ஊரே

திரண்டது ஊதுபத்தி சூடத்தோடு.

———
ஸ்ரீதர்பாரதி

Visited 39 times, 1 visit(s) today
Close
Translate »