Written by 4:49 am கவிதை

இறைச்சி

என் இறந்த காலத்தைப்பற்றி கவலையில்லை
வயது கூடிக்கொண்டிருக்கிறேன்
துயரத்தை ஒரு குளிகைப்போல் விழுங்கி வளர்ந்தவன் நான்
என் பசிக்கு
இந்த பிரபஞ்சம்
தரித்திரத்தை தின்னக்கொடுத்திருக்கிறது
என் எடையைவிட கனம்பொருந்திய துக்கத்தை
வாழ்நாளெல்லாம் சுமக்க வேண்டியிருக்கிறது
மீதமுள்ள
இந்த இறைச்சி உடல்தான் பாவம்
மெலிந்து ஒரு நாயைப்போல்
பூமியில் அலைக்கழிகிறது
 
—————–
– ரவீந்திரன்
Visited 19 times, 1 visit(s) today
Close
Translate »