Written by 4:30 am கவிதை • One Comment

பீடங்களே ஆகும் தீபங்கள்

மாதத்தின் முதலிலோ
கடைசியிலோ
அல்லது எந்நாளிலாயினும்
மனைவியின் சண்டையிலிருந்து
விடுபட்டு வேலைக்கு செல்லும்
ஒரு கணவனிடம்
கவனமாக இருங்கள்.

அவன் ஒரு பளிங்கு கண்ணாடியின்
உள்ளெரியும் பொதிந்த தீபமாய்
பயணப்பட்டு வருகிறான்.

நிறைவு என்னும் வெளி பற்றிய
அறிவு அவனுக்கு உண்டு.

அந்த விழிப்பின் ஏகாந்ததை
அனுபவிக்க அவன்
உங்களைப் பயன்படுத்திவிடக்கூடும்.

பின்
ஒரு
பீடமென
நீங்கள்
அவனை
சுமக்க
வேண்டும்.

சுமை என்னவென்றால்
பீடங்களும் தீபங்களும்
ஒன்றென அறிக.
—————–
இரா. அரிகரசுதன், 22.07.2024

Visited 29 times, 1 visit(s) today
Close
Translate »