நாங்கள்

அனலி சமூக இயக்கம்
கலை இலக்கிய ஊடகங்களின் வழியாக சமூக மாற்றத்திற்காக இயங்கிக்கொண்டிருக்கக்கூடிய தன்னார்வலர்களே நாங்கள்.
அனலி சமூக இயக்கம் தன்னுடையப் பயணத்தை 2007 இல் நாகர்கோவிலை தலைமையிடமாகக் கொண்டு முறையாகப் பதிவுபெற்ற தன்னார்வ அமைப்பாக உதயமானது.
குமரிமாவட்ட நாகர்கோவில் வாத்தியார்விளை எனும் ஊரைச்சார்ந்த சமூக அக்கறைக்கொண்ட படைப்பாளரான கவிஞர் இரா. அரிகரசுதன் அவர்களின் நெறியாளுகையில் உருவான அனலி தன்னுடைய அனைத்து கலை இலக்கியப் பணிகளையும் சமூக மேம்பாட்டுப் பணிகளையும் பரவலாக தமிழகம் முழுமையாக செய்து கொண்டிருக்கின்றது.
தற்போது கோயம்புத்தூரில் ஒத்த சிந்தனையும் செயல்திறனும் கொண்டோரோடு இணைந்து சிறப்பாக செயல்பட்டுக் கொண்டிருக்கின்றது.
எப்போதும்போல் அனலிக்கு உங்கள் ஆதரவை வழங்கவேண்டும் என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
தோழமையுடன்
இரா. அரிகரசுதன், தலைவர், அனலி


“அனலி” எனும் சிந்தனைப் பள்ளி
கலை இலக்கியங்கள் சமூக மாற்றத்திற்கே எனும் மையக்கருத்தைச் செயலூக்கமாகக் கொண்டு; கவிஞர் இரா. அரிகரசுதன் அவர்களின் நெறியாளுகையில் கலை, இலக்கியம், ஊடகங்கள், ஆற்றுகைகள், சமூக மேம்பாட்டுச் செயல்பாடுகள் போன்றவைகளுக்கான ஒரு சுதந்திர வெளியாகவும் சிந்தனைப் பள்ளியாகவும் இயங்கிவருகின்றது அனலி .
அவ்வகையில் அனலியின் செயல் இயக்கத்தில் எம்மோடு இணைந்து நேரடியாகவும் துணைநின்றும் பயணிக்க விரும்புபவர்களை தோழமையுடன் அழைக்கிறோம்.
பேசுக | எழுதுக : 94434 83074 | analitamil@gmail.com
அனலி இதழ் படைப்புகள்
- கட்டுரை 3
- கதை 3
- கவிதை 29
- தலையங்கம் 1
- நூலறிமுகம் 2
- படைப்பாளர்கள் 2
- புகைப்படம் 1
- பேட்டி 1
- வாசகர்கருத்து 3
இரா. அரிகரசுதன்

Anali

Copyright 2024 Anali | Privacy Policy