கலை இலக்கியங்கள் சமூக மாற்றத்திற்கே!

நீங்கள் கலை இலக்கிய ஆர்வலரா?

நீங்கள் கலை இலக்கிய ஊடகத் துறைகளில் ஆர்வம் கொண்டவராகவும் சமூகத்திற்கு நன்மை செய்ய வேண்டும் எனும் எண்ணம் உள்ளவராகம் இருப்பீர்களே ஆனால் எம்மோடு இணைந்து கொள்க. 

ஓர் சமூகப் படைப்பாளராக உங்களை சிற்பப்படுத்துவதற்கான வாய்ப்பும் சமூகத்திற்கான பங்களிப்பில் நிறைவு மனம் கொள்ளவும் வருக. 

தன்னார்வர் தொடர்பு மின்னஞ்சல்
analitamil@gmail.com, பேசி +91 94434 83074

நிறுவனத் தொடர்பு மின்னஞ்சல்
analisocialforum@gmail.com, பேசி +91 94434 83074

கலை

மனித

சமூகத்தின்

ஆன்மா...!

அனலியின் கலை இலக்கியப் பணிகளில் தன்னார்வலர்களாக இணைவதின் மூலம் கலை இலக்கிய ஊடகப் பயிற்சிகள் பெற்று தாங்கள் வளம்பெறுவதும் சமூகத்தின் விளிம்பு நிலையினருக்கும் ஆர்வம் இருந்தும் சூழல்காரணமாக கற்க இயலாதோருக்கும் மற்றையோருக்கும் பயிற்சிக் கொடுப்பது போன்ற பணிகளை செய்ய இயலும். இதன்மூலம் தங்கள் ஆளுமைத் திறன் வளர்வதோடு சமூகத் தலைமைகொள்ளும் ஆற்றலும் பெற ஏதுவாய் அமையும்.

நமது செயல்பாடுகள்?

கலை இலக்கியக் கல்விப்பணி

குறிப்பாக கலை இலக்கியக் கல்விப் பணியில் அனலி மிகவும் கவனம் செலுத்தி வருகின்றது. 

கலை இலக்கியங்களை கற்பித்தலின் வழியாக சமூக மாற்றத்திற்கு மனங்களை இசையச் செய்ய இயலும் என்பதுவும், கலை இலக்கியங்கள் மக்கள் மனதை பக்குவப்படுத்துவதோடு மனிதநேய அழகியல் வாழ்வனுபவத்தை கொடுக்கவல்லது என்று நம்பிக்கை கொண்டுள்ளது. 

அனலி உறுப்பினராக

தன்னார்வலர் பணி

  • ஆசிரியர்
  • சமூகப் பணியாளர்
  • தொழில் நுட்பக் கலைஞர் 
  • ஊடகக் கலைஞர்
  • கருத்தாளர்
  • படைப்பாளர்
  • நிகழ்கலைக் கலைஞர்
  • தொகுப்பாளர்
  • வழிகாட்டி
  • ஆற்றுப்படுத்துனர்
  • நிருவாகப் பணி
  • வடிவமைப்பாளர்
  • நிறுவன தூதுவர்
  • ஆய்வாளர்
  • புரவலர்
செயலும் பயனும்

இணைந்து பயணிப்போருக்கு

  • பணி அனுபவச் சான்றிதழ்
  • ஆய்வுகளில் பங்கேற்பு
  • புதிய ஆய்வுகள் செய்வதற்கான வாய்ப்பு
  • ஊடகப் பணி வழிகாட்டுதல்
  •  படைப்புகள் வெளியீடுகள்
  • கற்றல் கற்பித்தல் வாய்ப்புகள்
  • தங்கள் துறை சார்ந்த பரிசோதனைகள்
  • சமூக மேம்பாட்டு திட்டமிடலில் பங்கேற்பு
  • தோழமை அமைப்புகள் நிறுவனங்களோடான தொடர்புகள்
  • தலைமைத்துவப் பயிற்சி
  • பண்படு மனம் 
  • ஈகைச்செயல்பாடுகளில் இணைவு
  • அனலியை பிரதிநிதித்துவப்படுத்துதல்
  • அசாத்தியங்களை சாத்தியங்களாக்கும் வல்லமை
Visited 125 times, 1 visit(s) today
Close
Translate »