அனலியின் படிப்புகள் கலை, இலக்கியங்கள், ஊடகம், ஆய்வு போன்ற பல்வேறு துறைகள் சார்ந்தவை ஆகும்.
அனலி கற்றல் சூழல் மற்றும் வாய்ப்புகள் குன்றியோருக்காகவும் சமூகம் மாற்றச் சிந்தனை கொண்டோருக்குமான ஓர் கற்றல் வாய்ப்புகள் கொண்ட வெளியாகும்.
அதுபோலவே கலை, இலக்கியங்கள் சமூக மாற்றத்திற்கே எனும் சிந்தனையை மையப்படுத்திய ஓர் சிந்தனைப் பள்ளியுமாகும்.
அனலியில் நேரடி கற்றல், தொலைதூரக் கற்றல், இணையவழி கற்றல் போன்ற கற்றல் முறைகளில் ஏதோ ஒரு வகையிலும் அல்லது வாய்ப்பு, சூழல், தேவை கருதி இம்முறைகளுள் ஏதேனும் இருவகையையோ அல்லது அனைத்து வகைகளையும் கலந்தும் கூட கற்பதற்கான வாய்ப்புகளைக் கொண்டுள்ள ஓர் இலாபநோக்கற்ற ஓர் எளிய பள்ளியாக இயங்கிவருகின்றது.
தேர்ந்த சமூக அறிவும் பிரஞ்ஞையும் பெற்ற அனுபவமிக்க சிறந்த ஆசிரியர்கள், கலைஞர்கள், இலக்கியவாதிகள், கருத்தாளர்கள், திறன் வல்லுனர்கள் போன்றோர்களின் வழிகாட்டுதலின் அடிப்படையிலேயே அனலியின் கற்றல் செயல்பாடு அமைந்திருக்கின்றது. இது அனலியின் சிறப்பாகும்.
அனலியில் கற்றல் அனுபவம், செயல்பாட்டு அனுபவம், பரிசோதனை அனுபவம் என (learning, practical and experiment) கற்றலின் நோக்கத்தை நிறைவு செய்யும் விதமாக பாடத்திட்டம் வடிவமைக்கப் பட்டிருக்கின்றது.
அனலியின் வகுப்புகள் மிகவும் அறிவார்ந்த தளத்திலும் பங்கேற்பு தளத்திலும் சிறந்து அமைந்துள்ளன. பங்கேற்பாளர் அல்லது கற்போர் கேட்பவர்களாக மட்டும் இல்லாமல் செய்முறை பயிற்சிகளில் ஈடுபட்டு ஆர்வமுடன் படைப்பனுபவத்தை பெறும் விதத்தில் இருப்பது மிகவும் சிறப்புவாய்ந்ததாகும்.
இங்கே கற்றலும் கற்பித்தலும் நடைபெறுகின்றது. கல்வியும் கற்றல் சமூக மாற்றத்திற்கு பயன்பட வேண்டும் எனும் முதன்மை நோக்கைக் கொண்டே அனலி முன்னேராய் பயணிக்கின்றது.
தோழமையுடன்
இரா. அரிகரசுதன், தலைவர்