நாங்கள்

அனலி சமூக இயக்கம்

கலை இலக்கிய ஊடகங்களின் வழியாக சமூக மாற்றத்திற்காக இயங்கிக்கொண்டிருக்கக்கூடிய தன்னார்வலர்களே நாங்கள். 

 

அனலி சமூக இயக்கம் தன்னுடையப் பயணத்தை 2007 இல் நாகர்கோவிலை தலைமையிடமாகக் கொண்டு முறையாகப் பதிவுபெற்ற தன்னார்வ அமைப்பாக உதயமானது.

 

குமரிமாவட்ட நாகர்கோவில் வாத்தியார்விளை எனும் ஊரைச்சார்ந்த சமூக அக்கறைக்கொண்ட படைப்பாளரான கவிஞர் இரா. அரிகரசுதன் அவர்களின் நெறியாளுகையில் உருவான அனலி தன்னுடைய அனைத்து கலை இலக்கியப் பணிகளையும் சமூக மேம்பாட்டுப் பணிகளையும் பரவலாக தமிழகம் முழுமையாக செய்து கொண்டிருக்கின்றது.

 

தற்போது கோயம்புத்தூரில் ஒத்த சிந்தனையும் செயல்திறனும் கொண்டோரோடு இணைந்து சிறப்பாக செயல்பட்டுக் கொண்டிருக்கின்றது.

 

எப்போதும்போல் அனலிக்கு உங்கள் ஆதரவை வழங்கவேண்டும் என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். 

 

தோழமையுடன்

 

இரா. அரிகரசுதன், தலைவர், அனலி

IMG20220825102150
Visited 122 times, 1 visit(s) today
Close
Translate »