இரண்டு நாடுகளுக்கிடையிலான யுத்தத்தில் பணம் ஆயுதங்கள் பொருளாதார கட்டுப்பாடுகள் பறக்கின்றனகணைகளாக அன்றாடச் சாலையில்டாங்கியைப் பார்த்தமக்களின் ஊர்த்திபீதிஅடைந்து நகருகையில் கருவண்டை நசுக்கும்பூட்ஸ்கால்களே எனடாங்கி ஏறிச்செல்வதைமாடியிலிருந்தும் வீடுகளிலிருந்தும்பார்த்துக் கொண்டிருக்கின்றது உலகம் மீண்டும் மீண்டும் காட்டும்தொலைக்காட்சிகளில்வலைக்காட்சிகளில்வீடியோகேம்வடிவம் கொண்டிருக்கும்அந்த போதை கண்டங்கள் தாண்டிபடிகின்றது ஊடகங்கள்அறிவுசீவிகள்சரி தவறுதராசுகளை சுமக்கிறார்கள் ஊழ்வினை உறுத்தும்என்பவர்களும் உண்டு யுத்தத்தைநடத்தும் பார்வையாளர்கள்நடத்துகிறார்கள் தனித்து நிற்கிறோம் என்றும்இடையில் எவர் வந்தாலும்அவ்வளவுதான் என்றும்புறப்பாடுகள் சிறுத்தையின் வாயிலுருந்தும்சிங்கத்தின் வாயிலிருந்தும்பூக்களை விளையச்செய்துபட்டாம்பூச்சிகளை பறக்கச் செய்யும்சிற்பிகளும் கவிஞர்களும்ஒருக்கழித்து படுத்துக்கொள்கிறார்கள்கடற்குச்சியெடுத்துவானத்தை வரைபவர்கள்மட்டும் உட்கார்ந்து பேசுவதற்கானஓர் இடத்தை சுமந்து உலவுகிறார்கள்திரு புதின் அவர்களேபுறாக்களைப் பற்றிஎன்ன நினைக்கிறீர்? அணுவையும்ஆயுதத்தையும் அறிந்தப்பட்சிகளே அவை தற்போதுஉன்தோட்டத்திலேயேமாடம் கொண்டிருக்கின்றன கண்டுகொள் அப்பனே நாங்கள் உன்னை வானத்தில்வரைவோம். ………….இரா.அரிகரசுதன், 27.02.2022