உதயசங்கரின் கல்வெட்டு ஆவணப்பணி

கல்வெட்டு உள்ள ஊர் சார்ந்த இடங்களை தொகுப்பது பற்றிய குழப்பமும் / தீர்வும்

கல்வெட்டுகளை ஆவணப்படுத்தும் முயற்சியில் 1887ம் ஆண்டில் இருந்து இந்திய தொல்லியல்துறையினரால் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்ட கல்வெட்டு புத்தகங்கள் (ARIE), 1961ம் ஆண்டில் இருந்து தமிழக தொல்லியல்துறையினரால் வெளியிடப்பட்ட புத்தகங்கள்மற்றும் ஆவணம், சிற்றிதழ்கள், தனிநபர்கள் வந்த கல்வெட்டுகள்Topographical List – மாநிலம், மாவட்டம், வட்டம், ஊர், இடம்Dynasty List – அரசு, மன்னர்Period List – வருடம்Language – மொழி, வடிவம்Summary – விளக்கம்இந்த வடிவில் இந்தியா முழுக்க இருக்கும் கல்வெட்டுகளைதொகுத்து புத்தகமாக வெளிவந்துள்ளன. இதில் Annual Report on Indian Epigraphy (ARIE) என்பது கல்வெட்டு, செப்பேடு கண்டுபிடித்தது ஒவ்வொரு ஆண்டிலும் அதற்கான INDEX நம்பராக கொடுத்துள்ளது. கல்வெட்டை படித்து அதற்கான விளக்கம் South Indian inscription, Epigraphica Serious, மற்றும் தமிழ்க தொல்லியல்துறை வெளியிடும் புத்தகத்தில் (ARIE எண் இல்லாத புது கல்வெட்டும்) உள்ளது. 1887ல் இருந்து தொகுக்கப்பட்ட புத்தகங்களில் இருக்கும் ஊர், வட்டம், மாவட்டம், மாநிலங்கள் தற்சமயம் அரசின் நிர்வாக வசதிக்காக தற்சமயம் வேறு வட்டம், மாவட்டம், மாநிலங்களாக இருக்கின்றன. மெட்ராஸ் மாகாணம் தெலுங்கானாவில் உள்ள வாரங்கல், கர்நாடகாவில் உள்ள ஹம்பி, கேரளா, தமிழ்நாடு வரை இருந்துள்ளது. அப்போது இருந்த மாவட்டம்: (1) Anantapur ; (2) Bellary; (3) Chingleput; (4) Chittoor; (5) Cuddapah; (6) Ganjam; (7) Godivari East; (8)
Godivari West; (9) Guntur; (10) Kistna; (11) Kurnool; (12) neighborhood of Madras, the former capital city; (13) Malabar; (14) Nellore; (15) Nilgiris; (16) North Arcot; (17) Ramnad; (18) Salem; (19) South Arcot; (20) South Kanara; (21) Tanjore; (22) Tinnevelly; (23) Vizagapatam; (24) Trichinopoly; (25) Coimbatore (26) Madurai.இதில் ஃப்ரெஞ்ச் நிர்வாகத்தில் இருந்த பாண்டிசேரி, சமஸ்தானமாக இருந்த புதுக்கோட்டை, திருவாங்கூர் போன்றவை தனி. நிர்வாக ரீதியாக இருந்த மாவட்டங்கள் மொழிவாரி மாகாணமாக பிரியும் வரை கிட்டதட்ட ஒன்று போலும் பின்னர் மாநிலங்களாக பிரிந்து இன்று வரை ஒவ்வொரு 15-20 வருடங்களில் பல மாவட்டங்கள், தாலுகாவாக பிரிந்து உள்ளன. வட ஆற்காடு- திருவண்ணாமலை, வேலூர், திருப்பத்தூர்.தென் ஆற்காடு – கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி.ராம்நாட்- ராமநாதபுரம், விருதுநகர், சிவகங்கை.தாலுகாவாக இருந்தவை தற்போது மாவட்டம். இது போல தஞ்சை, கோயம்புத்தூர், மதுரையிலும் இதே போல் உள்ளது.மதுரை மாவட்டம் திண்டுக்கல் தாலுகா பழனி ஊர், தற்போது திண்டுக்கல் மாவட்டம் பழனி தாலுகா, விரைவில் பழனி மாவட்டமாக வரும் வாய்ப்பு உள்ளது, மதுரை மாவட்டம் பெரியகுளம் தாலுகாவில் தேனி ஊர், தேனி தற்போது மாவட்டம். செங்கல்பட்டு மாவட்டம், சைதாப்பேட்டை தாலுகா, வேளச்சேரி ஊர் என இருந்தது. தற்போது சென்னை மாவட்டத்தில் சைதாப்பேட்டை உள்ளது. வேளச்சேரி தாலுகாவாக உள்ளது. அதே செங்கல்பட்டு மாவட்டத்தின் கீழ் காஞ்சிபுரம் தாலுகாவாக இருந்தது பின்னர் காஞ்சிபுரத்தின் கீழ் செங்கல்பட்டு தாலுகாவாக சில வருடங்கள் இருந்து பின்னர் மீண்டும் செங்கல்பட்டு மாவட்டமாக இருக்கிறது.வழக்கில் இல்லாத மாவட்டம்அண்ணா, பெரியார், எம்ஜிஆர், காயிதே மில்லத், பசும்பொன் மாவட்டம் என பெயர் மாற்ற காலகட்டங்கள் உண்டு. வட ஆற்காடு, தென் ஆற்காடு மாவட்டமே இல்லைதமிழ்நாட்டில் இருந்த ஊர் தற்போது வேறு மாநிலங்களில் உள்ளது1910ல் Madras Presidency – Coimbatore – Kollegal – Mudigondamவேறு மாநிலத்தில் இருந்த ஊர் தற்போது தமிழ்நாட்டில் உள்ளது.1896ல் Madras Presidency – Chittoor – Tiruttani- Tiruvalangaduஎழுத்து முறை – Trichinopoly, Tiruchirappalli, Tiruchirapalli, Triuchchirappalli, Thiruchchirappalli, Thiruchchirapalli, trichy, திருச்சிராப்பள்ளி ஆங்கிலத்தில் திருச்சியை 7 விதமாக எழுதி உள்ளனர். கிட்டதட்ட அதே நிலைமை தான் அனைத்து இடப் பெயர்களும்.கீழ் என்பதை kil, keel, கூட என்பது kuda, guda என்றும் எழுதி இருப்பர்Kilakkudi – Kilakuyilkudi, Kilkuyilkudi-KilakuyilkudiKilaiyur- KeelaiyurKilkudalur-Keelagudalurஊர்கள் மற்றும் சிற்றூர்இந்திய முழுமைக்கும் நிர்வாக ரீதியாக நாடு – மாநிலம் – மாவட்டம் – தாலுகா / ப்ளாக் / பிர்க்கா – ஊர் – சிற்றூர் என்று இருக்கும்சிற்றூர் இருக்கும் இடங்களை கொடுக்கும் போது அதன் ஊரை Hamlet என்று குறிப்பிட்டு இருப்பர். அதுபோல இருக்கும் ஊர்களை தேடி கண்டுபிடிப்பது மிகப்பெரிய சவாலான ஒன்று.அதிலும் ஊர் பெயர்களில் குழப்பம் (Jambukeswararam, Thiruvanaikaval) ஊரின் பழைய பெயர் தற்போது வேறு பெயராக இருக்கும்சில கல்வெட்டுகள் இடங்களை குறிப்பிட்டு அந்த கல்வெட்டு தற்போது அருங்காட்சியத்தில் உள்ளது அந்த கல்வெட்டு சொல்லப்பட்ட ஊர் எப்படி தேடினாலும் கிடைக்காது வடக்கில் உள்ள மாநிலங்களில் நிறைய இதுப் போல உள்ளன.புத்தகத்தில் சொல்லிய ஊர் சம்பந்தமே இல்லாமல் வேறு ஒரு மாவட்டத்தில் இருக்கும்.ஊர் பெயர்கள், அதுவும் ஒரே மாவட்டத்தில் அருகருகே உள்ள தாலுகாவில் அமைந்தால் அந்த ஊரில் கொடுத்து இருக்கும் கோயில்கள் வைத்து ஒரளவு கண்டுபிடிக்கலாம். ஆனால் பாறை, நடுகல், சிவன் கோயில், பிள்ளையார் கோயில் என்று சொன்னால் இன்னும் சிக்கல். உம். மங்கலம், ஆரணி.-புத்தகத்தில் இருந்து தொகுத்து அட்டவணைப்படுத்தி அதை இன்றைய நிர்வாகரீதியாக இருக்கும் மாவட்டம் – தாலுகா – ஊர் மாற்றும் முயற்சியாகதமிழ்நாட்டில் 38 மாவட்டங்களில் 3-10 தாலுகா உள்ளன. ஒவ்வொரு தாலுகாவில் 5 – 15 வரை ஊர்கள் உள்ளன. ஆந்திராவில் 26 மாவட்டங்களில் 30 மண்டலம் / தாலுகா வரை உள்ளன. ஒவ்வொரு மண்டலத்திலும் 10 ஊர் வரை உள்ளன.இவைகளை தேடி எடுக்க 7 விதமான முயற்சிகளை செய்து வருகிறார் உதயசங்கர். 1. தமிழக / இந்திய அளவில் கொடுத்து இருக்கும் ஊர்களுக்கான அட்டவணை (இதிலும் சிக்கல் உள்ளன பின்னர் விளக்கப்படும்)2. Google Map3. Wikipedia, onefivenine, village info போன்ற இணையதளங்கள் (இதிலும் பிரச்சனை 10 வருடத்திற்கு முந்தைய தகவல் உள்ளன)4. Old British Books / Record5. 1910 ல் இருந்து Census Record & Court order (சில ஊர்கள் இதில் மட்டுமே குறிப்பிடப்பட்டுள்ளன)6. மற்ற புத்தகங்களில் Pre published என்று குறிப்பிடுவதை வைத்து அறியலாம்7. சம்பந்தபட்ட மாவட்ட நண்பர்கள், அதிகாரிகளுடன் பேசி தகவலை உறுதி செய்வது.இறுதியாக இந்திய முழுமைக்கும் அந்த ஊரை எதிர்காலத்தில் இந்த இடம் சார்ந்த சிக்கல் வராத அளவிற்கு தனித்துவமான எண்ணை கொடுத்து வருகிறார் உதயசங்கர். இவை இந்திய அளவில் உபயோகிக்கும் முறையில் தொகுக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழ் கல்வெட்டு அல்லது தமிழ் சார்ந்த தடங்கள் மற்ற மாநிலங்களில் எத்தனை என்பது அறிய உதவும்.–இந்த இடம் சார்ந்த பிரச்சனைகளினாலேயே நிறைய புது கல்வெட்டு என்று பழைய கல்வெட்டுகளே சுற்றுகின்றன.அதனால் சரி செய்யாமல் வெளியிட்டால் இன்னும் நிறைய குழப்பங்கள் வரும் இதை சரி செய்யவே நிறைய காலம் எடுத்துக் கொள்கிறது. இவை கல்வெட்டுக்கு மட்டும் அல்ல, எதிர்காலத்தில் Arabic & Persian, Tomb, கோயில், நடுகல், மலை, குகை, பாறை ஒவியம், வரலாற்று சிறப்புமிக்க இடங்களும் இதை போல் கொண்டு வர திட்டம். கல்வெட்டு புத்தகம், சாசனம், Antiquities, திருப்பதி, திருவாங்கூர், புதுக்கோட்டை, மைசூர், தனிநபர் புத்தகங்களை அனைத்தையும் ஒரு சேர ARIE கொண்டும் Topography சார்ந்து இணைத்தால் படித்த / படிக்காத கல்வெட்டு அறியவும், கல்வெட்டுகளுக்கான மிகப்பெரிய தரவுதளமாக உருவாக்க முடியும். இந்த கல்வெட்டு தரதளம் தமிழ், ஆங்கிலம், Diacritic mark என மூன்று மொழிகளில், 6 விதமான துணை கருவிகளுடன் வெளிவரும். (Database, Timeline, Time map, Atlas, Report, Analytics, Etc)இத்தனை வருடத்தில் தனது பெரும்பகுதி நேரத்தை இதற்கே செலவழித்துக் கொண்டிருக்கிறார் உதயசங்கர். அவர் உதவி என்று கேட்டவை புத்தகங்கள் / ஆலோசனைகள் மட்டுமே..பணமாகவே, நன்கொடை வாங்காமல் தான் அவரது உதயம்.இன் இணையதளம் இயங்குகிறது. நேரம், பொருள் என நிறைய செலவழித்து விட்டாலும் தற்போது வேலைகள் பெரிதாக செய்ய இருப்பதால் அவருக்கு உதவி தேவைப்படுகிறது. உதவ நினைப்பவர்கள்புத்தகம் – தங்களிடம் உள்ள கல்வெட்டு புத்தகங்கள் இருந்தால் தெரியப்படுத்தலாம். படங்கள் – கல்வெட்டு படங்கள் இருக்கும் பட்சத்தில் தெரிவிக்கலாம்.தட்டச்சு – மாவட்ட வாரியாக கல்வெட்டு வரிகளை மட்டும் தட்டச்சி / OCR செய்து உதவலாம்.பண உதவி – பணமாக உதவ நினைப்பவர்கள் அவருடைய எண்ணிற்கு பணம் அனுப்பியும் உதவலாம். 
GPay No : 9940232560மேலும் அவரது எண்ணிற்கு தொடர்பு கொண்டு இதுசம்பந்தமாக வேறுஉதவிகளும் செய்யலாம்.  

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

© 2025 Anali. All rights reserved.
Scroll to Top