Written by 6:08 am நூலறிமுகம்

அனலி வணக்கம்

நண்பர்களே, அனலி சமூக மாற்றத்தில் நம்பிக்கைக் கொண்டு இயங்கக்கூடிய கலை இலக்கியப் ஊடகவெளிக்கான ஓர் இலாப நோக்கற்ற தன்னார்வ அமைப்பாகும். குமரி மாவட்டம் நாகர்கோவிலை தலைமை இடமாகக் கொண்டு கவிஞர் சமூகச் செயல்பாட்டாளர் இதழியலாளர் இரா. அரிகரசுதன் அவர்களின் தன்முனைப்பான முன்னெடுப்பில் 2007 ஆம் ஆண்டு முதல் அனலி சமூக இயக்கம் எனும் பெயரில் இயங்கிவருவருகின்றது.

தற்போது கோவையிலும் தமிழகம் தழுவியபல்வேறு பகுதிகளிலும் தனது செயல்பாடுகளை பரவலாக செய்துவருகின்றது. 

கலை இலக்கியங்களை கற்பித்தல், நமது மண்ணின் கலைகளை பாதுகாக்க விழிப்புணர்வு, ஆய்வுகள், படைப்பாக்கங்கள் போன்றவைகளை நடத்துதல், ஊடகக் கல்வி கொடுத்தல், நாடகப்பயிற்சி, கற்றல் செயல்பாடுகளுக்கான பயிற்சி, கலை இலக்கிய படைப்பு வடிவங்களின் வழியாக ஆற்றுபடுத்துதலுக்கான பயிற்சி என பல்வேறு செயல்பாடுகளை அனலி தன்னளவிலேயும் ஒத்தக் கருத்துக்கொண்ட மற்ற நற்குணம் கொண்டோரின் ஆதரவோடு செய்துவருகின்றது.

நீங்களும் இப்பணியில் எமக்கு ஆதரவு நல்குவதோடு, எங்களோடு இணைந்து பயணிக்க அன்புடன் அழைக்கின்றேன்.

தோழமையுடன்
இரா. அரிகரசுதன், தலைவர், அனலி

Visited 33 times, 1 visit(s) today
Close
Translate »