மாதத்தின் முதலிலோ
கடைசியிலோ
அல்லது எந்நாளிலாயினும்
மனைவியின் சண்டையிலிருந்து
விடுபட்டு வேலைக்கு செல்லும்
ஒரு கணவனிடம்
கவனமாக இருங்கள்.
அவன் ஒரு பளிங்கு கண்ணாடியின்
உள்ளெரியும் பொதிந்த தீபமாய்
பயணப்பட்டு வருகிறான்.
நிறைவு என்னும் வெளி பற்றிய
அறிவு அவனுக்கு உண்டு.
அந்த விழிப்பின் ஏகாந்ததை
அனுபவிக்க அவன்
உங்களைப் பயன்படுத்திவிடக்கூடும்.
பின்
ஒரு
பீடமென
நீங்கள்
அவனை
சுமக்க
வேண்டும்.
சுமை என்னவென்றால்
பீடங்களும் தீபங்களும்
ஒன்றென அறிக.
—————–
இரா. அரிகரசுதன், 22.07.2024

அருமையான கவிதை .சிறப்பு.இயல்பான நிகழ்வுகளை கவிதையாக்கும் வித்தைகாரர்.
நான் அவருடன் சேர்ந்து பயணித்த காலங்களில் தான் சில நிகழ்வுகளை கவிதையாக்க்கினார் ,வாசித்தும் காண்பித்தார். அதன்பிறகே நானும் இயல்புகளை கவிதையாக்க முயற்சி செய்தேன்.அதுதான் படைப்புக்கும் படைப்பாளனுக்கும் இடைவெளி இல்லாமல் இருக்கும் .நன்றி.