உள்ளங்கையில் இருக்கும்சமாதானத்தைஒரு கடுவன் பூனையைப்போல்உருட்டி விளையாடுவதுநல்லதல்ல.. போர் ஒரு பண்டம்.பண்டங்களை விற்கும்பண்டம். பனிக்காலத் தசையுள்ஓடும் இரத்தவெதுவெதுப்போடுபொதிந்திருக்கிறது, அமைதி. அது அப்படி,இது இப்படி,அன்று அப்படி நடந்ததால்..நடக்காததால்.. எல்லாம் சரிதான்.. ஏறெடுத்துப் பாருங்கள்ஒரு நல்ல விதைஉள்ளங்கையில்துடிப்பு காட்டுகிறது. நீ ஒரு கரடியாகவேஇருப்பதில் அல்லது உன் கரடிஎனும் பெயரை அப்படியே வைத்திருப்பதில்ஒன்றும் இல்லை. ஒழுகவிடாதே. இரண்டு காதுகளைக் கொண்டஓ.. கரடியே..! நியாயத் தீர்ப்புகளேயாயினும்உண்மையின் பிசுபிசுப்பைஎங்கே ஒளித்து வைப்பது! சமாதானத்தைபேச்சுவார்த்தையைமீண்டும் மீண்டும்ஒளிக்கீற்றுகளாக மாற்றி மாற்றிதீற்றும்ஒரு புத்த கரடியாய்மாறிதான் பாரேன்…! காற்றில் ஒரு மெல்லிறகாய்காலங்கள் கடந்தும்பறக்கலாம்!! அதுவே பண்டமுமாம்! பராபரம். ………………………இரா. அரிகரசுதன், 26.02.2022
Hey! Someone in my Facebook group shared this website with us so I came to look it over.
I’m definitely loving the information. I’m bookmarking and will be tweeting this to my followers!
Fantastic blog and terrific style and design.