அவளில்லாத நாட்களில்

முன்னும் பார்த்திருக்கிறேன்இப்படி ஓடியதில்லைபதறியதுமில்லை தெருவில் வளையவரும்நாயைக் கண்டுதான்அவளுக்கு பயம்“பைரவா” மந்திரம்துணை என்பாள் நாய் வளர்த்ததில்லைசோறும் வைத்ததில்லை அவளுக்கு பிள்ளைக்கு எனக்குபக்கத்து வீட்டினருக்குஅவர்களின் கார்களுக்குஎல்லோருக்கும் காவல்சொல்லி சொல்லி ஆற்றியிருப்பேன் சொந்த கார் வைத்திருப்பவர்கள்நாயையும் வைத்திருக்கிறார்கள்இரண்டையும் கழுவிஅருமையாய் வைத்திருப்பார்கள் வளர்ப்போனிருக்கையிலஎட்டிக் கடித்ததுசதைக்கொழுத்த நாய் ஒன்றுஎன்னை பயந்துபோயிருந்தாள்அவள் கரப்பான்களைபல்லிகளை அவள் திட்டுவாள்அப்படித்தான் பராமரிப்பாள் குழந்தைஅலறுகையில் சிலவற்றை“பிள்ளையையா பயமுறுத்தா?”கொல்லவும் செய்வாள்எனக்காகவும் சிலசமயம் சமையல் திண்டுகழுவுப் பள்ளம்குப்பைக்கூடை காய்கறிக்கூடைஆலாய்ப் பறக்கின்றனகரப்பான்கள் பல்லிகள் பசி எப்படி அடங்கும்போக்கிடம் ஏதுபக்கத்து வீடுகளுக்கு போகுமா? முன்னும் பார்த்திருக்கிறேன்இப்படி ஓடியதில்லைபதறியதுமில்லை வயிறேறி உள்புரளும் பூனையைகரப்பானால் என்ன செய்ய முடியும்பல்லியாலும்தான்…பாவமாயிருக்கிறது ………………………………………இரா. அரிகரசுதன், 30.05.2019

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

© 2025 Anali. All rights reserved.
Scroll to Top