உணவுக்காக இறங்கிக் கொண்டிருந்தேன்ஈரம்போன வாழையென எதிர் பட்டார்வளாகத்தின் வாயிற் காவலர் “உணவு முடிந்ததா?””ஆமாம். இன்றைக்கு போயிருங்க”,ஏன்! என்ன ஆச்சு?”இங்க தங்கக்கூடாது,” நிறுத்தமும் இலக்கும் இல்லாதபயணத்தில்தோழனின் அறை வங்கிக் கடனில் படித்தவன்சம்பளத்தை மனம்வந்தால் பிச்சையிடும்தனியார்க் கல்லூரியின் ஆசிரியன் மதிப்பூட்டப்பட்ட காகிதத்தைகைகளில் திணித்துவேலைக்குச் சென்றிருந்தான்”இங்கேயே தங்கு, பார்த்துக் கொள்ளலாம்”உள்ளங்கையைத் தொட்டிருந்தான் ஒருதோசை அல்லது இரண்டுஇட்டலியோடு வயிற்றை மூடுபவரின்இலையில் உமிழும் கண்களையும்கால்களையும் கொண்ட உணவுக்கடை கல்லாவில் நின்றுக் கொண்டிருந்ததுகுழந்தை “அப்பா என்னை தூக்கு”கொஞ்சி நீட்டியது கரங்களை”இன்னும் இன்னும்”சாயம் வற்றியிருந்த உத்திரத்தைதொட்டு சிரித்தது என்ன செய்வது தோழா?அவசர வேலை,வேறெங்கோ ஓர் இடத்தில்இன்னொருநாளில்கட்டாயம் சந்திப்பேன். ……………………….. இரா. அரிகரசுதன், 18.09.2013