கண்கள் நிலைகுத்தகன்னத்தில் கைபதித்துஉற்சாகத்தோடு’ஊங்’ கொட்டியகடைசிச் சீவனும்காலாவதி ஆகிவிடகதைகள் அனைத்தையும்கைப்பற்றி அழைத்துப் போய் ஆழ்கிணற்றில் வீழ்ந்தான் ஆஜானுபாகுவானகதைசொல்லிசனம் பதறி குத்தத்திற்காய்பரிகாரம் தேடஅன்று தொட்டுஎட்டாம் நாள்கதைகளும்கதைசொல்லியும்உயிர்த்தெழபரிவாரங்களாயினகதைகள்-காவல் தெய்வமானான் கதைசொல்லிபிறகென்ன ‘ஊங்’ கொட்ட ஊரே
திரண்டது ஊதுபத்தி சூடத்தோடு.
———
ஸ்ரீதர்பாரதி
அருமையான கவிதை ,என் சிறு வயதில் இப்படி நிறையக் கதைச்சொல்லிகள் இருந்தார்கள். அவர்கள் அனைவரும் குழந்தைகளுக்குத் தாத்தாவாக,மாமாவாக.பிறகு அவர்கள் ஓய்ந்த ஒரு நாளில் கதைகளும் ஓயத் தொடங்கின.