ஐம்பது வயது
சமூகம்ஐம்பது வயதினனிடம்கொடூரமானநிதானத்தைக் கோருகிறது. வெள்ளுடுப்பைஅதன் திமிர்த்தனத்தைக் கோருகிறது. தன்னிறைவைதோளுயரப் பிள்ளைகளைகான்கிரீட் வீடொன்றையும்கோருகிறதுசமூகம்பாசாங்கின் ஆன்மீகத்தையும்.உள்ளில் பகையெனினும்உதட்டின் புன்னகையையும் நம்புகிறது. நடிப்பெனினும் மரியாதை விளியையும்கடனெனினும்சுடரும் வாகனத்தையும்கோருகிறது. அறம்பிழைத்துப் பொருளியற்றாஎளியோனிடம்சமூகம் சொல்வது […]